Upside Down Full Movie in Tamil Dubbed



படத்தை பற்றிய சில தகவல்கள் 

வெளியான தேதி : ஆகஸ்ட் 23, 2012

இயக்குநர் : ஜுவான் டியாகோ சாலனஸ் ( Juan Giego Solanas )

பட்ஜெட் : 5 கோடி அமெரிக்க டாலர்கள்

பாக்ஸ் ஆபிஸ் : 81 லட்சம் அமெரிக்க டாலர்கள்


படத்தின் கதை

           இந்த படத்தில் இரண்டு உலகங்கள் எதிரெதிரே இருக்கிறது. அதுவும் இரண்டு பூமிக்கும் வெவ்வேறு ஈர்ப்பு சக்தி இருக்கும். அதாவது இந்த பூமியில் இருக்கிறவர்கள் அங்கே செல்ல முடியாது. அந்த பூமியில் இருக்கிறவர்கள் இங்கே வர முடியாது. அப்படியே வந்தாலும் அவர்கள் அவர்களின் பூமியிலேயே கீழே விழுந்துவிடுவார்கள். இப்படி இருக்கும் ஒரு உலகத்தில் இரண்டு பூமியையும் இணைக்கும் மாதிரி ஒரு மிகப்பெரிய மலை உள்ளது. ஆனால் அங்கு யாருமே போகக்கூடாது என இரண்டு உலகத்திலேயும் சட்டம் போட்டிருப்பார்கள்.

ஒருநாள் படத்தின் ஹீரோ ஆர்வத்தில் அந்த மலைக்கு போகிறார். அப்போது எதிரே உள்ள பூமியிலிருந்து ஒரு பெண்ணும் அந்த மலைக்கு வருகிறாள். இருவரும் காதல் வயப்படுகினற்னர். இந்தசைடு இருக்கும் ஹீரோ ஒரு கயிறு மூலம் ஹீரோயினை தன்னுடைய பூமிக்கு இழுக்கிறான். இதை பார்த்த அந்த பெண்ணின் பூமியை சேர்த்த போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி மூலம் சுடுகினற்னர். அதில் அந்த கயிறு அறுந்துவிழுந்து அந்த பெண் கீழே விழுகிறாள். அதன்பிறகு 10 வருடங்கள் முடிகிறது. நமது ஹீரோ இரண்டு பூமியையும் இணைக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

அப்போது தீடிரென எதிர்திசையில் ஹீரோயினையும் பார்க்கிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு தலையில் அடிபட்டதால் இவன் யாரென்றே தெரியவில்லை. அதன்பிறகு அந்த பூமியின் ஈர்ப்பு சக்தியை தாங்கும் வகையில் ஒரு காந்தத்தை கண்டுபிடித்து அந்த பெண்ணை பார்க்க அவள் இருக்கும் பூமிக்கு போகிறான். பிறகு இவரும் காதல் செய்கின்றனர். மேலும் பழைய ஞாபகமும் திரும்ப வருகிறது. ஆனால் இவன் அந்த பூமியை சேர்ந்தவன் இல்லை என்று அங்கு உள்ளவர்களுக்கு தெரியவருகிறது. இருந்தாலும் நமது ஹீரோ அங்கிருந்து தப்பித்து தனது பூமிக்கு வருகிறார். இப்படியே இவர்கள் காதல் தொடர்கிறது........

இந்த படத்தை பற்றிய உங்களது சதேகங்களையும், வேறு ஏதேனும் ஆங்கில படங்களின் கதைகளை தமிழ் மொழியில் படிக்க கீழே உள்ள Comment மூலம் பதிவு செய்யுங்கள்.