Loan எதற்கு வாங்க வேண்டும்? Loan வாங்குவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள்

Loan எதற்கு வாங்க வேண்டும்?

  Loan வாங்கி 5 வருடம் படித்துவிட்டு வேலை தேடியும் கிடைக்காமல் கடன்காரனாக தவிக்கும் பலநபர்கள், வீடு கட்டுவதற்காக loan வாங்கி வீட்டை கட்டவும் முடியாமல், loan-ற்கு வட்டி கட்டவும் முடியாமல் தவிக்கும் சில நபர்கள் போன்ற பல்வேறு நபர்கள் தங்களின் வாழ்க்கையின் தேவைக்காக loan வாங்கி கட்டமுடியாமல் தவிக்கின்றனர். பெரும்பாலும் வங்கிகள் மற்றும் Android App போன்ற பல இடங்களில் நமக்கு சுலபமாக loan கிடைக்கிறது. ஆனால் அதை திருப்பித்தான் கட்டமுடியவில்லை. உங்களுக்கு பணம் முக்கியமான ஒரு விஷயத்திற்காக தேவைப்பட்டால், அதை சுலபமாக மாதம் வரும் சம்பளத்தின் மூலம் கட்டமுடியும் என்றால் மட்டுமே loan வாங்குவதை பற்றி யோசியுங்கள். இல்லையென்றால் loan வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையே அளித்துவிடுங்கள் loan  உங்களை அழித்துவிடும்.



Bike Loan வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

  * உங்களுக்கு என்ன தேவைக்காக Bike தேவைப்படுகிறது என்று யோசியுங்கள். Bike வைத்திருக்கும் பலபேர் மற்றவர்களின் கவனம் நம் பக்கம் திரும்ப வேண்டும் என்பதாலையே bike வாங்குகின்றனர்.

  * வேலைக்கு சென்று தொடர்ச்சியாக மாதம் குறைந்தது Rs.20,000 சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே Bike-ஐ loan மூலம் எடுத்துக்கொள்ளலாம். ஏன்னெனில் வீட்டில் இருப்பவர்களுக்கு Bajaj போன்ற Loan தரும் நிறுவனங்கள் மாதம் Rs.10,000 சம்பளம் வாங்குபவர்கள் அல்லது 23 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு loan கொடுப்பதில்லை.

  * மாதம் வரும் EMI குறிப்பிட்ட மாதம் செலுத்தாமல் இருந்தால் உங்களுக்கு loan தரும் நிறுவனம் அந்த வாகனத்தை எந்தவித கேள்விக்கு இன்றி அபகரித்து விடுவார்கள். பிறகு நீங்கள் முழுப்பணத்தையும் செலுத்திய பிறகுதான் bike-ஐ உங்களிடம் ஒப்படைப்பார்கள். அதனால் மாதந்தோறும் வரும் EMI-ஐ உங்களால் உறுதியாக செலுத்த முடியுமா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

  * முக்கியமாக Bike வாங்குவதற்கு முன் அதன் விலை, Model, பெட்ரோல் வரத்து போன்ற பல விவரங்களை பார்க்கவேண்டும். Bike loan பெறுவதற்கு வீடு சொந்தமானதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் லோன் கிடைக்காது.

  * வீட்டிற்கு மின்கட்டணம் செலுத்திய Bill, bank check leaf, புகைப்படம், PAN Card, Aadhar Card போன்றவைகளை Bike Loan பெறுவதற்குமுன் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு Bike loan பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

Post a Comment

0 Comments