கடல் கன்னிகள் கிடைத்த அற்புத சக்தி

கடல் கணினியால் கிடைத்த அற்புத சக்தி  கடல் அருகில் உள்ள ஒரு அழகிய கிராமத்தில் ஒரு இளைஞன் கடல் வழியே நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு மிகப்பெரிய மீன் கடற்கரையில் ஓரத்தில் ஒதுங்கி கடலினுள் போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த இளைஞனுக்கு ஐயோ பாவம் இந்த மீனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவன் அந்த மீனுக்கு அருகில் மிகப் பெரிய பள்ளத்தை தோன்றி அந்த மீனை இந்த தண்ணீரில் தள்ளிவிட்டு கடலுக்குள் போக உதவியாக இருந்தான். மீனுக்கு உதவி செய்த சந்தோசத்தில் அந்த இளைஞன் கடற்கரையில் கொஞ்ச தூரம் நடந்து கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் ஒரு பெண் அவனை பார்த்து கூப்பிடுவது போல் இருந்தது. அந்த பெண் வேற யாரையோ கூப்பிடுவதாக நினைத்துக்கொண்டு அந்த இளைஞன் வேகமாக நடந்து சென்றான். சிறிது நேரத்தில் உன்னத்தான் கூப்பிடுகிறேன் கொஞ்சம் நில் என்று கேட்டது உடனே அவன் நின்றான். பிறகு அந்தப் பெண் அந்த இளைஞன் அருகில் வந்து, நீ சிறிது நேரத்திற்கு முன்பு காப்பாற்றியது சாதாரண மீன் அல்ல எங்கள் கடல் அரசனின் குழந்தை. அதனால் எங்கள் கடல் அரசர் உங்களை அழைத்து வரச் சொன்னார் என்று சொன்னாள்.

  அதற்கு அந்த இளைஞன் எனக்கு நீச்சல் கூட சரியாக தெரியாது நான் எப்படி கடலுக்குள் உங்களுடன் நீந்தி வருவேன் என்று சொன்னான். அந்தப் பெண், நீ நீந்தலாம் தேவையில்லை நான் ஒரு கடல் கன்னி என் மேல் நீ ஏறி அமர்ந்து கொள் நான் உன்னை பத்திரமாக எங்கள் அரசரிடம் கூட்டிச் செல்கிறேன் என்று சொன்னது. அந்தப் பெண் கடலில் இறங்கியதும் ஒரு அழகான கடல் கன்னியாக மாறியது. அந்த இளைஞனும் இந்த பெண்ணின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு கடலினுள் சென்று கடல் அரசரை சந்திக்க சென்றான். கடலை சரி சந்திக்க சென்ற பொழுது அந்த கடல்கன்னி அந்த இளைஞனைப் பார்த்து, நீ கடல் அரசரிடம் எல்லாவற்றையும் கேட்பது போல் இருக்கக் கூடிய மாய காதுகளை வாங்கிக்கொள் அது உனக்கு கிடைத்தால் எல்லா உயிரினங்கள் பேசுவது உனக்கு புரியும் வேறு எதையும் கேட்டு விட்டு விடாதே என்று சொன்னது. அந்த இளைஞன் அரசரை சந்தித்தான். கடல்கன்னி சொன்னது போலவே தனக்கு மாய கதைகளைக் வரமாகக் கேட்டான் உடனே தன் மகளை காப்பாற்றியதால் கடல் அரசரும் அவன் கேட்ட மாயை காதுகளை வரவழைத்து அவனுக்கு கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு அந்த இளைஞன் கடல் தரைக்கு மேலே சென்றான். சிறுது நேரம் கடற்கரையில் அமர்ந்து இருந்த அந்த சிறுவன் இரண்டு குயில்களும் மரத்தின் மேல் சத்தம் போடதே கேட்டான். அப்பொழுது அவனுடைய கதைகளை எடுத்துக் கொண்டு அந்த குயில்கள் என்ன பேசுகிறது என்று கேட்டான். உயிர்கள் இரண்டும் இந்த மனிதர்கள் முட்டாள்களாக இருக்கின்றனர். அருகிலுள்ள குளத்திலிருந்து கல்லை எடுத்து வைத்தால் அது தங்கமாக மாறிவிடும் என்பது கூட தெரியாமல் இத்தனை நாள் அதை வீணாக வைத்திருக்கிறார்கள் என்று சொன்னது.

  அந்த விஷயத்தை கேட்டு இந்த இளைஞன் உடனே அந்த குளத்திற்குச் சென்று கல்லை எடுத்துப் பார்த்தால், அது சிறிது நேரத்தில் பல பலவென தங்கமாக மாறியது. இந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டைப் பார்த்து சென்று கொண்டு இருந்தார் அப்போது மரத்தில் இருந்த இரண்டு காகங்கள் பேசிக்கொண்டு இருந்தது. சரி அது என்ன பேசுகிறது என்று கேட்போம் என அதையும் மாயைகளை கொண்டு கேட்டுப் பார்த்தான். அந்தக் காக்கைகள், பண்ணையார் வீட்டில் உள்ள மகளுக்கு ஏதோ நோய் வந்துவிட்டது போல் எல்லோரும் பதறுகிறார்கள் ஆனால் அவர்கள் வீட்டின் மேற்கூரையில் ஒரு பாம்பு சிக்கிக் கொண்டது அதை காப்பாற்றினால் பண்ணையாரின் மக்களுக்கு எந்த நோயும் வராது இருக்கும் நோயும் சரியாகிவிடும் என்று கூறியது. அந்த இளைஞன் உடனே பண்ணையார் வீட்டை நோக்கி சென்றான். வீட்டின் வெளியே என் மகளின் நோயை குணப்படுத்த வீரர்களுக்கு என்ன கேட்டாலும் அது பரிசாக கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. பண்ணையாரிடம் அந்த இளைஞன் சென்று நான் உங்களின் மகளின் நோயை குணப்படுத்துகிறது என்று சொல்லி முதலில் வீட்டின் மேல் இருக்கும் பாம்பை காப்பாற்றுங்கள். அதைக் காப்பாற்றினாலே மகளுக்கும் வியாதி குணமாகிவிடும் என்று சொன்னான்.

இளைஞன் சொன்னதை போல் பலரும் அந்தப் பாம்பை காப்பாற்றி அதற்கு பால் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். உடனே பண்ணையாரின் மகளும் எழுந்து பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டாள். இதைக்கண்ட பண்ணையாருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் பண்ணையார் தனது மகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். அந்த இளைஞன் அந்தப் பெண்ணுடன் நலமாக வாழ்ந்து வந்தான்.

இதிலிருந்து நாம், பலனை எதிர்பார்த்து உதவி செய்யக்கூடாது. நாம் பலனை எதிர்பார்க்காமல் செய்யும் உதவி கூட என்றாவது ஒரு நாள் நமக்கான பலன் நம்மை வந்து சேரும் என்பதை உணர முடிகிறது.

Post a Comment

0 Comments