மந்திரத்தால் ஆன மழைக்கோட்டு

மந்திரத்தை ஆன ரெயின்கோட்
  பாலு என்ற 10 வயது சிறுவன் ஒரு ஊரில் தன்னுடைய பெற்றோர்களோடு வளர்ந்து வந்தான். அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். பாலு படிப்பதற்காக தினமும் பள்ளிக்கு சென்று வருவான். ஒருநாள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே அந்த ஊரில் அதிகமாக மழை பெய்தது. இதனால் பாலு பரிசு சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மிகவும் தாமதமாக சென்ற பாலுவை அவனது ஆசிரியர் கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த பாலு தனது வீட்டிற்கு சென்று தனக்கு ரெயின்கோட் வாங்கித் தருமாறு தன்னுடைய பெற்றோர்களிடம் கேட்டான். நாமிருக்கும் கஷ்டத்தில் ரெயின்கோட் வாங்குவதற்கு பணம் இல்லை என்று வாழ்வின் பெற்றோர்கள் சொன்னார்கள். வேறு வழியின்றி பாலு அடுத்த நாள் ரெயின்கோட் இல்லாமல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சிலந்தி மழைநீரில் மாட்டிக்கொண்டது. பாலு அந்த சிலந்தியை மழைநீரில் இருந்து காப்பாற்றி அதன் வலையில் மிகவும் பாதுகாப்பாக விட்டார். அப்போது அந்த சிலந்தி பாலுவை பார்த்து நீ எனக்கு உதவி செய்திருக்கிறாய் அதற்காக உனக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கேட்டது. அதற்கு பாலு எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ பாதுகாப்பாக இரு என்று சொன்னான்.

  நீ தினமும் மழையில் நனைந்து கொண்டு தான் பள்ளிக்கு செல்கிறாய். அதனால் நான் உனக்கு ரெயின்கோட் தருகிறேன் என்று அந்த சிலந்தி சொல்லிவிட்டு தனது மந்திரத்தால் ஒரு ரெயின் கோட்டை பாலுவிற்கு கொடுத்தது. பாலு அந்த ரைன் கோட் அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றான். ஆனால் அங்கு பார்வை தவிர மற்ற யாருமே ரெயின்கோட் கொண்டு வரவில்லை. பள்ளி முடிந்த பிறகு பாலு எனக்கு ரெயின்கோட் தருகிறாயா என்று பாலுவின் நண்பர் கேட்ட உடனே பாலு தனது ரெயின்கோட்டை கொடுத்தான்.  பாலு தனது ரெயின்கோட்டை கழட்டி கொடுத்தாலும் பாலுவின் உடம்பில் இன்னொரு ரெயின்கோட் இருந்தது. பாலுவின் இன்னொரு நண்பரும் தனக்கும் ரெயின்கோட் வேண்டும் என்று கேட்க, பாலு தன்னிடம் இருந்த ரெயின்கோட்டை கழட்டி கொடுத்தாலும் பாலுவிடம் ரெயின்கோட் வந்து கொண்டே இருந்தது.

  பாலு இந்த அதிசயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினான். பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். பாலுவிற்கு கிடைத்த இந்த மந்திரம் கூட்டை வைத்து பலருக்கும் மழையில் நனையாமல் இருப்பதற்காக ரெயின் கோட்டை கொடுத்து உதவி செய்தனர். மேலும் சந்தையில் ஒரு ரெயின்கோட் கடையே போடும் அளவிற்கு பாலுவிடம் இருந்து ரெயின்கோட்டை கழட்டி கொண்டே இருந்தார்கள். அந்த மந்திர ரெயின்கோட்டால் பாலுவின் பெற்றோர்களுக்கு இருந்த மிகப்பெரிய பணகஷ்டம் தீர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான் அது எப்பொழுதுமே பலனை எதிர்பார்த்து ஒரு உதவி செய்யக்கூடாது. பலனை எதிர்பாராமல் செய்யும் உதவிக்கு நாம் நினைக்காத அளவுக்கு மிகப் பெரிய பலன் நம்மை வந்து சேரும்.

Post a Comment

0 Comments