மந்திர சக்தியால் கிடைத்த மாம்பழங்கள்

மந்திர சக்தியால் கிடைத்த மாம்பழங்கள்


  முன்பொரு காலத்தில், ஒரு அழகிய கிராமத்தில் ஒரு வயதாகும்போது அவரும் அவருடைய மனைவியும் ஒரு கூரை வீட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த முதியவருக்கு சிறு வயதிலிருந்தே மந்திர சக்திகள் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கஷ்டப்பட்டு ஒரு மந்திர சக்தியை கற்றுக்கொண்டார். அவர் அந்த மந்திர சக்தியை வைத்து பேராசை படாமல் அன்றன்றைக்கு தேவையான உணவுப் பொருட்களை மட்டும் இந்த மந்திர சக்தி மூலம் வரவழைத்து நலமாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அந்த முதியவர் அருகிலுள்ள காட்டிற்கு சென்று அங்கு காய்ந்துபோன மாமரத்தை பார்த்து மந்திர வார்த்தைகளைச் சொல்லி மந்திரத் தண்ணீர் தெளித்தார். அப்போது அந்த மாமரத்தில் கிடுகிடுவென இலைகள், பூக்கள் பூத்து, மாம் பழங்கள் பழுத்து கீழே விழுந்தது. இதை தூரத்திலிருந்து பார்த்த ஒரு இளைஞன் அந்த முதியவரிடம் எப்படியாவது அந்த மந்திர சக்தியை கேட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

  அதனால் கார்த்திக் என்ற அந்த இளைஞன் அந்த முதியவர் வீட்டிற்குச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தான். திடமும் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது, அவர்களுக்கு கூடமாட இருந்து வேலை செய்வது என எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டான். சில நாட்களிலேயே அந்த வீட்டிலிருந்த பாட்டிக்கு கார்த்திக் தாத்தாவிடமிருந்து மந்திர சக்திகளை கற்று கொள்வதற்காகவே இவ்வாறு உதவிகளை செய்து வருகிறார் என்று தெரியவந்தது. அதை நினைத்த அவர்கள் கோபப்படவில்லை. கார்த்திக் செய்த உதவிகளால் அந்தப் பாட்டியின் மனம் குளிர்ந்து ஒரு நாள் பாட்டி, தாத்தாவிடம் சென்று இந்தப் பையன் நமக்கு உதவியாக இருக்கிறான் அதனால் இவனுக்கு உங்களின் மந்திர சக்தியில் ஒன்றை கற்றுக் கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு தாத்தா, கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் அந்த மந்திரம் வேலை செய்யுமா என்று தெரியவில்லை ஆனால் இவர் பேராசை காரணமாக கூட இருக்கலாம் என்று சொன்னார்.

அதற்கு பாட்டி, நீங்கள் முதலில் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுங்கள் அது வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று சொன்னார். முதியவரும் பாட்டி சொன்னதைக் கேட்டு கார்த்திக் என்ற இளைஞனுக்கு அவரது மந்திர சக்திகளில் ஒன்றான மரத்திலிருந்து மாம்பழங்களை வரவைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தார். பிறகு இந்த மந்திர சக்தியை உனக்கு நான் தான் கற்றுக் கொடுத்தேன் என்று கூறினால் இந்த மந்திர சக்தி தன் சக்தியை இழந்து விடும் என்று கூறினார். கார்த்திக் அந்த மந்திர வார்த்தைகளை வைத்து மாம்பழங்களை வரவழைத்து அதை சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்று வாழ்ந்து வந்தார். ஒருநாள் கார்த்திக்கின் மாம்பழங்கள் அந்த நாட்டின் ராஜாவிற்கு சென்றது. உடனே இந்த மாம்பழங்களை விற்ற வரை கூட்டி வாருங்கள் என்று ராஜா கூறினார். தம்பி இது குளிர் காலம் ஆயிற்று இந்த நேரத்தில் உனக்குமா வளங்கள் எப்படி கிடைக்கும் இது நல்ல சக்தி அல்லது தீய சக்தி யா என்று கேட்டார்.

  அதற்கு கார்த்திக், அரசே எனக்கு கிடைத்திருக்கும் ஒரு சக்தியை வைத்து தான் நான் இந்த மாம்பழங்களை வர வைத்தேன் என்று கூறினான். ராஜா உடனே நான் அந்த வித்தையை பார்க்க வேண்டும் எனக்கு செய்து காட்டு என்று சொன்னார். கார்த்திக்கும் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று ராஜா முன் மந்திர வார்த்தைகளைச் சொல்லி அந்த மந்திரத்தை மரத்தின் மீது தெளித்து மாம்பழங்களை வரவழைத்து கொடுத்தான். மந்திர மாயாஜாலத்தை கண்ட ராஜாவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ராஜா உனக்கு இந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தது யார் என்று கேட்டார். கார்த்திக் அந்த முதியவர் சொன்னதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் எனக்கு இந்த முதியவர் தான் கற்றுக் கொடுத்தார் என்று உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

  ராஜா, கார்த்திக் நம்பாமல் அந்த இடத்தை விட்டு அனுப்பி விட்டார். மனமுடைந்து போன ராஜா தன் வீட்டிற்குச் சென்று நன்றாக உறங்கினான். அடுத்த நாளே ராஜாவிற்கு மாம்பழம் சாப்பிடுவது போல் இருப்பதால் கார்த்திகை வரவழைத்து தனது தோட்டத்திற்கு கூட்டிச்சென்று மாம்பழங்களை வரவழைத்துக் கொடு என்று கேட்டார். கார்த்திக் மந்திர வார்த்தைகளைச் சொல்லி மந்திரத் தண்ணீர் தெளித்து பல முறை முயற்சி செய்து பார்த்தும் ஒரு மாம்பழம் கூட வரவே இல்லை. பிறகுதான் கார்த்திக்கு தெரிந்தது தான் அந்த முதியவர் சொன்ன வார்த்தை மீறியதால் தனக்கு இருந்த மந்திர சக்தி போய்விட்டது என்று. என்னை மன்னித்துவிடுங்கள் ராஜா உங்களிடம் நான் உண்மையைச் சொன்னதால் என்னிடம் இருந்த சக்தி போய்விட்டது என்று ராஜாவிடம் கூறிவிட்டு கார்த்திக் தனது வீட்டிற்குச் சென்றான்.

இதிலிருந்து நாம், ஒருவர் நம்மிடம் கூறும் விஷயங்களை வெளியில் சொல்லாமல் காப்பதே சிறந்தது என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

Post a Comment

0 Comments