Magical island Tamil story - மந்திர சக்திகள் நிறைந்த தீவு

மந்திர சக்திகள் நிறைந்த தீவு




  கலிங்க கூரம் என்ற ஊரில் மாதவன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு அப்பா அம்மா யாரு மில்லை தனியாகத்தான் வாழ்ந்துவந்தான். மாதவன் ஒரு நாளைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அன்று இரவு உணவு உண்ண கூட வழியில்லாமல் தான் இருந்தது. இந்த ஊரில் இருந்தால் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்த மாதவன் வெளியூருக்குச் சென்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து ஒரு படகின் மூலம் வெளியே சென்றான். அப்பொழுது கடலில் ஒரு புயல் உருவாகி மாதவன் சென்ற படகை கவிழ்த்து விட்டது. ஆனால், மாதவன் கடலில் மூழ்காமல் எப்படியோ ஒரு மரக்கட்டையை பிடித்து நீண்டுகொண்டே ஒரு தீவுக்கு வந்தான். அந்தத் தீவில் மனித நடமாட்டமே இல்லாத அளவுக்கு இருந்தது. மேலும் அந்த தீவில் எங்கு பார்த்தாலும் ஒரே தேங்காய் மரங்கள் மட்டுமே இருந்தது. அதனால் மாதவன் வேறு வழியின்றி இந்த தீவில் உள்ள தேங்காய்களை பறித்து மூன்று வேளையும் அதையே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தான்.

  ஒருநாள் மாதவன் மரத்திலுள்ள தேங்காய்களை பறிப்பதற்காக மரத்தின் மேல் ஏறி அமர்ந்து இருந்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. தூரத்தில் ஒரு காட்டுப்பன்றி காற்றில் பறந்து வந்தது. மாதவன் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த காட்டுப் பன்றி மாதவன் இருந்த அந்த தீவிற்கு வந்து படுத்து உறங்கியது. அந்தப் பன்றி நன்றாக உறங்கியதும் மாதவன், பன்றி எப்படி பறந்தது என்பதைப் பார்ப்பதற்காக அதன் அருகில் சென்றான். அப்போது மாதவனுக்கு பன்றியின் அருகில் பல பலக்கக் கூடிய ஒரு வைரக்கல் கிடைத்தது. மாதவன் அந்த வைரக் கல்லை கையில் எடுத்தான். சிறிது நேரத்திலேயே காட்டுப்பன்றி தூக்கத்திலிருந்து எழுந்து இருக்க தொடங்கியது. அப்போது மாதவன் நாள் பேசாமல் அந்த தேங்காய் மரத்திலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்தான். மாதவன் நினைத்தவுடனே அப்படியே கண்ணிமைக்கும் நேரத்தில் தேங்காய் மரத்தில் இருந்தான். அப்போது தான் அவனுக்கு புரிந்தது இது ஒரு மந்திர சக்தி நிறைந்தவர்கள் என்று. உடனே மாதவன் அந்த வைரக் கல்லை எடுத்துக் கொண்டு அந்த தீவை சுற்றிப் பார்ப்பதற்காக பறந்து சென்றான். அப்பொழுது காட்டின் நடுவில் மாதவனுக்கு ஏதோ புகைவது போல் தெரிந்தது உடனே மாதவன் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தான். அங்கே இரண்டு கால்கள் இல்லாமல் ஒரு வயதான முதியவர் சமைத்துக் கொண்டிருந்தார். மாதவன் அந்த முதியவரைப் பார்த்து எனக்கு பசிக்கிறது ஐயா எனக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கேட்டான். அந்த முதியவரும் மாதவன் கேட்பதற்கு இணங்க தான் வைத்திருந்த சாப்பாட்டை அவனுக்கும் கொடுத்தார்.

அந்த முதியவர் மாதவனை பார்த்து, இது ஒரு மந்திர சக்தி நிறைந்த தீவு இதனோல் நீ எப்படி வந்தாய் என்று கேட்டார்.அதற்கு மாதவன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நடந்ததையெல்லாம் அப்படியே கூறினான். அதுமட்டுமில்லாமல் மாதவன் கையில் வைத்திருந்த அந்த வயதுகள் பற்றிய கதையையும் முழுவதுமாக கூறிவிட்டான். உடனே அந்த முதியவர் நான் வயதாக இருக்கிறேன். நீ எனக்கு அந்த மந்திர சக்தி நிறைந்த வைரக்கல்லை கொடுத்தால் நான் உனக்கு இந்த மந்திர சக்தி நிறைந்த கோடாலியை தருகிறேன். இதைவைத்து நீ என்ன நினைத்தாலும் அந்த கோடாலி உடனே சென்று அந்த மரத்தை வெட்டி சாய்த்து விடும் என்று சொன்னார். அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு மாதவன் தன் கையில் இருந்த வைரக்கல்லை கொடுத்துவிட்டு அவரின் மந்திர சக்தி நிறைந்த கோடாலியை வாங்கினான். உடனே மாதவன் அந்த கோடாலியை அந்த பெரியவரை பார்த்து வீசியதால் கோடாலி அவரின் கழுத்தை இரண்டாக பிளந்தது. உடனே மாதவன் தன் கல்லையும், கோடாலியையும் எடுத்துக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு பறந்து சென்றான். அங்கே ஒரு வீட்டில் முதியவர் இரண்டு கைகள் இன்றி பக்கத்தில் ஒரு பால் சொம்புடன் இருந்தார். அது ஒரு மந்திர சக்தி நிறைந்த சொம்பு. அதில் எவ்வளவு உண்பதற்கு உணவு எடுத்துக்கொண்டாலும் குறையாமல் நாம் கேட்ட உணர்வைத் தரக்கூடியது. மாதவன் தன் கையிலிருந்த கோடாலியை அந்த முதியவரைப் பார்த்து வீசி அவருடைய சம்பவம் திருடி விட்டான்.

  இது மூன்றையும் எடுத்துக்கொண்டு மாதவன் காட்டில் கொஞ்ச தூரம் பறந்து சென்றார் அப்போது மாதவனுக்கு மிகப்பெரிய மேல சத்தம் கேட்டது. என்ன என்று அருகில் சென்று பார்த்தால் ஒரு மிகப்பெரிய அரக்கன் ஒரு மேலத்தை வைத்துக்கொண்டு மாமிசக் கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மேலும் அந்த மத்தளம் ஆனது மந்திர சக்தி நிறைந்தது. மாதவன் அந்த அரக்கனையும் தனது கோடாலி மூலம் கொலை செய்துவிட்டு மத்தளத்தையும் திருடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான். மாதவன் கையிலிருக்கும் மந்திர பொருட்களை வைத்துக் கொண்டு மீண்டும் தன்னுடைய ஊருக்கு சென்றார். பிறகு மாதவனின் மந்திர பொருட்களை வைத்து அந்த ஊரின் அரசன் ஆக மாறிவிட்டான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். வாய்ப்புகள் எப்போதாவதுதான் கிடைக்கும். அதை உடனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  மற்றவர்கள் எப்படி அல்லது என்ன ஆகிறார்கள் என்பது நமக்கு முக்கியமில்லை நாம் வாழ்ந்தால் அதுவே போதும்.

Post a Comment

0 Comments