மாயாஜால கம்பளம் - தமிழ் சிறுகதைகள் Part 9

Tamil magical stories part 9  100 வருடத்திற்கு முன்பு மிகப்பெரிய நாட்டில் ராஜா ஒருத்தர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். ராஜா தனது கடைசி காலத்தில் அரண்மனையையும் ஆட்சியையும் என்ன மகனிடம் ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்து போனார். பிறகு ராஜாவின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. உடனே ராஜா தனது மூன்று மகன்களையும் அழைத்து, தனக்கு இந்த உலகத்தில் இருப்பதிலேயே வித்தியாசமான மற்றும் விலையுயர்ந்த பொருள்களை யார் கொடுக்கிறீர்களோ அவர்களே இந்த நாட்டின் அரசர் என்று சொன்னார். ராஜாவின் கட்டளையை ஒப்புக்கொண்ட மூன்று மகன்களும் ஒரு குதிரையையும் செலவுக்கு நிறைய பணத்தையும் எடுத்துக்கொண்டு தனித்தனி திசைகளில் போனார்கள். முதல் ராஜகுமாரன் ஒரு அழகிய கிராமத்திற்கு சென்றான். அங்கே விசாரித்தபோது சந்தையில் ஒருவர் மந்திரக் கம்பளம் விற்பதாக தெரியவந்தது. உடனே முதல் ராஜகுமாரன் அந்த சந்தைக்கு சென்று பறக்கும் கம்பளத்தை பணம்கொடுத்து வாங்கி வந்தான். 

  இரண்டாவது ராஜகுமாரன் ஆனந்தபுரம் என்ற ஒரு கிராமத்திற்குச் சென்றான். அங்கே ஒரு வியாபாரி மந்திர கண்ணாடியா ஒரு பொருளை விற்றுக் கொண்டிருந்தார். அவளிடம் சென்று விசாரித்த போது, இந்த மந்திரக் கண்ணாடியை நீங்கள் யார் என் மனதில் நினைக்கிறீர்களோ அவர்கள் உடனே உங்களுக்கு கண்ணாடியில் தெரிவார்கள் என்று சொன்னார். இரண்டாவது ராஜகுமாரன் இதை விட ஆச்சரியமான மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உலகில் இருக்க முடியாது என நினைத்துக்கொண்டு அந்த மந்திர கண்ணாடியை வாங்கி மீண்டும் அரண்மனைக்கு திரும்பினார். 

  மூன்றாவது ராஜகுமாரன் ஸ்ரீபுரம் என்ற ஊருக்கு சென்றடைந்தான். அங்கே தங்க நிறத்தில் இருக்கும் ஒரு தாமரையை ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அந்த தாமரையை யாருமே வாங்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே ராஜகுமாரன் அந்த இடத்திற்குச் சென்று இந்த தாமரை என்ன தங்க நிறத்தில் இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு கடைக்காரன் ஐயா இந்த தாமரையை நீங்கள் முகர்ந்து பார்த்தால் உங்களுக்கு எப்படிப்பட்ட நோயா இருந்தாலும் ஒரு நொடியில் குணமாகிவிடும். மேலும் எந்த நோயும் வராமல் நலமாக வாழலாம் என்று சொன்னான். மூன்றாவது ராஜகுமாரன் இதைவிட வித்யாசமான பொருள்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது என்று எண்ணி அந்த தங்க நிறத்திலான தாமரையை 5000 வருடங்கள் கொடுத்து தனது அரண்மனைக்கு வாங்கி வந்தார். 

  மூன்று சகோதரர்களும் அரண்மனைக்கு செல்வதற்கு முன்பு ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். அப்போது தான் வைத்திருப்பதுதான் பெரிய பொருள் என்று ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டனர். அது இரண்டாவது சகோதரன் இப்பொழுது நமது தந்தை என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கலாம் என்று சொல்லி தனது மந்திர கண்ணாடியை எடுத்து நீட்டினார். அதில் ராஜாவிற்கு மூன்று மகன்களும் அருகில் இல்லாததால் கடுமையான காய்ச்சல் வந்து படுக்கையில் படுத்து இருந்தார். அதைக் கண்டவுடன் தந்தை எப்படியாவது காப்பாத்த வேண்டும் என்ற எண்ணத்தில், முதல் ராஜகுமாரன் தான் வாங்கி வந்த பறக்கும் கம்பளத்தில் வைத்து மூன்று சகோதரர்களும் சேர்ந்து அரண்மனைக்கு பறந்து சென்றனர். அரண்மனைக்குச் சென்றவுடன் மூன்றாவது ராஜகுமாரன் வாங்கி வந்த தங்க நிறத்திலான தாமரை வைத்து தன் தந்தையின் நோயை நீக்கி அவரை குணமுடைய செய்தான். 

  ராஜாவிற்கு நோய் முழுவதும் குணம் ஆனாலும் இந்த மூன்று மகன்களில் யாருக்கு ராஜ்யத்தை கொடுப்பது என்பதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. உடனே ராஜா, தனது மூன்று மகன்களும் கொண்டுவந்த பொருள்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. ஆனால் அந்த மூன்று பொருள்களும் சேர்ந்து வந்ததால்தான் நாம் உயிர் பிழைத்தோம் அதனால் இந்த ராஜ்யத்தையும் மூன்று மகன்களுக்கும் கொடுப்பதே சரி என்று முடிவு செய்தார். உடனே ராஜா தனது ராஜ்யத்தை மூன்று பங்காக போட்டு, தனது மூன்று மகன்களையும் அதற்கு அரசர் ஆக்கினார். மூன்று சகோதரர்களுமே அவர்களின் ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகள் செய்து சிறப்பாக ஆட்சி புரிந்தனர்.

இதிலிருந்து நாம் ஒற்றுமையே சிறந்தது என்பதை உணர முடிகிறது. மேலும் இந்த கதை பற்றிய உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள். வேறு எதைப்பற்றிய கதைகள் உங்களுக்கு தேவை படுகிறது என்பதையும் மறக்காமல் கீழே பதிவு செய்யுங்கள்.

Post a Comment

0 Comments